இயக்கம்

வீட்டுக்கல்வி (Home Schooling):

வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பிரியாமல் – குழந்தைகளும் பெரியவர்களும் இணைந்து – ஒருவருக்கொருவர் கற்பித்தபடி – ரசித்து, அனுபவித்துக் கற்பது வீட்டுக்கல்வி அல்லது வீட்டில் கற்றல்.

* ‘புத்தகத்தைப் படி; பரீட்சை எழுது’ என்ற பள்ளி மாதிரியில் இருந்து இது விலகியது, குழந்தையின் ஆர்வம், விருப்பம், தேர்வு ஆகியவை வீட்டுக் கல்வியின் அடிப்படைகள்.

* சராசரியாகக் கல்வி கற்ற பெற்றோர் குழந்தைக்குக் கற்றுத் தருவதில் பள்ளி ஆசிரியர்களை விஞ்சி நிற்பார்கள் என்பது அனுபவப்பூர்வ உண்மை.

* கற்றுக் கொள்ளும் பிள்ளைகளிடத்தும் , கற்பிக்கும் பெற்றோர் தங்களிடத்தும் கொண்டுள்ள நம்பிக்கை (trust) வீட்டுக்கல்வியின் அடிப்படையாகும்.

* ஒவ்வொரு குழந்தையின் கற்கும் திறனும் (Learning Style) தனித்துவமானது. அதைக் கண்டறியப் பள்ளிகளால் முடியாது. வீட்டுக் கல்வியால் மட்டுமே முடியும்.

* குழந்தைகளிடம் கதைகளின் வழி ஓர் உரையாடலைத் தொடங்க அருவி இதுவரை நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளது. முதல் புத்தகம் ‘நாய் வால்’, இது சங்கிலிக் கதைகளின் (chain tales) தொகுப்பு. இரண்டாம் புத்தகம் ‘முயல்குட்டியும் போலீசுகாரரும்’. இது ஓசைக் கதைகளின் (tales with sound effect) தொகுப்பு. ‘சுண்டெலிக் கதைகள்’ மற்றும் ‘முதலைக் கதைகள்’  புத்தகங்களில் உள்ள கதைகள், குழந்தைகள் ஆச்சர்யத்தோடும் விருப்பத்தோடும் இணைந்து விடக் கூடிய விலங்குகள் உலகத்துக்கு கூட்டிச் செல்லும்.

* ‘அருவி’ தொடர்ந்து வீட்டுக் கல்விக்கு உதவும் நூல்களை வெளியிட உள்ளது.